Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 790)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
மத்யே க்ருசாம் உபயத: ப்ரதிபந்ந வ்ருத்திம் மந்யே ஸமீக்ஷ்ய பவதீம் மணிபாதரக்ஷே நித்யம் முகுந்தபத ஸங்கம் விப்ரயோகௌ நிச்சிந்வதே க்ருததிய: ஸுகதுக்க காஷ்டாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே இரண்டு பக்கத்திலும் பருத்தும், நடுவில் சிறுத்தும் நீ காணப்படுகிறாய் (முன்புறமும், பின்புறமும் பருத்துள்ளது). இப்படியாக உள்ள உன்னைக் கண்ட பெரியவர்கள் “ஸ்ரீரங்கநாதனின் தொடர்பு உள்ள நிலை என்பது சுகம், அதனை இழந்த நிலை என்பதே துக்கம்” என்று நிச்சயம் செய்கின்றனர் என எண்ணுகிறேன்.
பாதுகையில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை வைக்கும்போது விரல்கள் உள்ள முன்பகுதியும், குதிகால் பகுதியும் மட்டுமே அகலமாக உள்ளன. பாதுகையின் நடுப்பகுதி மீது ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் படுவதில்லை. இதனால்தான் அந்தப் பகுதி குறுகி உள்ளது. இதனையே இன்பம் - துன்பம் என்கிறார்.