Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 789)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
மநோசிதஸ்ய மததீந ஜநஸ்ய நித்யம் மாபூத் அத: க்ருபணதா இதி விசிந்தயந்த்யா பந்தீக்ருதம் த்ருவம் அவைமி வலக்நதேசே கார்ச்யம் த்வயா கமலலோசந பாதரக்ஷே
தாமரை போன்ற அழகான கண்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது மனதில், “எப்போதும் அனைவராலும் வணங்கத்தக்க என்னைச் (பாதுகை) சார்ந்த மக்களிடம் சிறுமை அல்லது இளைப்பு என்பது சென்றடையக் கூடாது”, என்று எண்ணுகிறாய் போலும்: இதனால்தான், உன்னுடைய இடுப்பு பாகத்தில் இளைப்பு என்பது சிறை வைக்கப்பட்டது போலும்.
சடாரியில் பாதுகை உள்ள இடம் சிறியதாகவே இருக்கும். இதனைக் கூறுகிறார். இங்கு சிறுமை என்பது சிறைபிடிக்கப்பட்டது என்றும், இதனால் இந்தத் தன்மை மற்றவர்களிடம் செல்லாமல் தடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.