Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 788)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

பத்தாஸிகா கநகபங்கஜ கர்ணிகாயாம் மத்யே க்ருசா முரரிபோ: மணிபாதுகே த்வம் ஸந்த்ருச்யஸே ஸரஸிஜாஸநயா க்ருஹீதம் ரூபாந்தரம் கிமபி ரங்க விஹார யோக்யம்

முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பொன்மயமான பாதுகையே! தங்கத்தால் செய்யப்பட்ட தாமரையில் (சடாரி), கர்ணிகை என்று கூறப்படும் மத்யபாகத்தில், இடை சிறுத்தவளாக நீ உள்ளாய். இப்படியாக உன்னைக் காணும்போது, ஸ்ரீரங்கம் என்னும் நாடகமேடையில் ஸஞ்சாரம் செய்வதற்காக ஸ்ரீரங்கநாச்சியாரால் எடுக்கப்பட்ட உருவம் போன்று தோன்றுகிறாய் (ஸ்ரீரங்கநாச்சியார் தனது அர்ச்சையில் தன்னுடைய ஸன்னதியை விட்டு வெளியில் வராமல் உள்ளதால், அவளே பாதுகை ரூபத்தில் வருகிறாள் என்று கொள்ளலாம்).