Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 787)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

வ்யூஹ க்ரமேண ப்ரதிதாரம் அக்ரே ஸந்தர்சயந்தீம் மணிபாதுகே த்வாம் பாதும் த்ரிலோபீம் பதபத்மபாஜம் ஸெளதர்சநீம் சக்திம் அவைமி செளரே:

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! வாஸுதேவன் முதலான ஐந்துவிதமான ரூபங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கநாதனை நீ எதிரில் காண்பித்துக்கொண்டு நிற்கிறாய். மூன்று உலகங்களையும் காப்பாற்றவே நீ ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்தாய் போலும். இப்படியாகத் தாமரைமலர் போன்ற அவன் திருவடிகளை அடைந்துள்ள உன்னை நான் ஸுதர்சன யந்த்ரம் என்றே நினைக்கிறேன்.