Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 786)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

வஹந்தி ரங்கேச்வர பாதரக்ஷே தீர்க்காயுஷாம் தர்சித பக்தி பந்தா: ஆசாதிபாநாம் அவரோத நார்ய: தவந் முத்ரிகாம் மங்கள ஹேமஸூத்ரை:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தீர்க்கமான ஆயுளைக் கொண்டவர்களான கிழக்கு போன்ற திசைகளின் அதிபதிகளான தேவர்களின் அந்தப்புரப்பெண்கள் செய்வது என்ன? அவர்கள் தங்கததால் செய்யப்பட்ட திருமாங்கல்ய சரடுகளில், உனது முத்திரையைப் பதித்துக் கொள்கின்றனர்.