Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 785)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
விம்ருச்ய ரங்கேந்த்ர பதிம் வராயா: ச்ருதே: ஸ்திதாம் மூர்த்தநி பாதுகே த்வாம் பத்த்நந்தி வ்ருத்தா: ஸமயே வதுநாம் த்வந் முத்ரிதாநி ஆபரணாநி மெளளெள
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனைத் தனது கணவனாகக் கொண்ட வேதங்களின் தலைப்பகுதியான உபநிஷத்துக்களில், நீ உள்ளதைப் பெரியவர்கள் காண்கின்றனர். இதனால்தான் அவர்கள், தங்கள் இல்லத்துப் பெண்களின் கல்யாணத்தின்போது, அவர்கள் தலையில் உனது முத்திரை கொண்ட ஆபரணம் ஒன்றைக் கட்டுகின்றனர் போலும்.