Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 784)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
பரஸ்ய பும்ஸ: பதஸந்நிவேசாந் ப்ரயுஞ்ஜதே பாவித பஞ்சராத்ரா: அகப்ரபாதீந் அபதிச்ய புண்ட்ராந் அங்கேஷு ரங்கேசய பாதுகே த்வாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பாஞ்சராத்ர ஆகமத்தைக் கற்றவர்கள், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் போன்றவையும், பாவங்கள் அனைத்தையும் அழிப்பவையாகவும் உள்ள திருமண்ணை, தங்கள் உடல் உறுப்புகளில் வைத்துக் கொள்கிறார்கள். இவை உன்னைப் போன்றே உள்ளன.