Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 783)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
தவ ரங்கநரேந்த்ர பாதரக்ஷே ப்ரக்ருதி: ஸந்நபி பக்தி பாரதந்த்ரயாத் பவதீம் வஹதீவ பந்நகேத்ர: ப்ரதித ஸ்வஸ்திக லக்ஷணை: சிரோபி
பாதுகையே ஆதிசேஷன் உனக்கு மூலகாரணமாக உள்ளபோதிலும், உன்னிடத்தில் அதிகமான பக்தி கொண்டிருந்தான். ஆகவே அவன், உன்னுடைய உருவம் போன்றே உள்ள ஸ்வஸ்திகம் என்ற கோடுகளைத் தனது தலைகளில் தாங்கி நிற்கிறான் போலும்.