Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 782)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

ப்ரதிஷ்டதி பாதஸம்மிதாயாம் த்வயி நித்யம் மணிபாதுகே முகுந்த: இதரே து பரிச்சதாஸ்த ஏதே விபவ வ்யஞ்ஜந ஹேதவோ பவந்தி

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிக்குச் சரியான அளவுள்ள உங்கள் மீது ஸ்ரீரங்கநாதன் எப்போதும் நிலையாக நிற்கிறான். ஆனால் அவனுடைய மற்ற பொருள்களான குடை, சாமரம் போன்ற பலவும் அவனுடைய பெருமைகளை வெளிப்படுத்த மட்டுமே உள்ளன.