Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 781)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
அணோ: அணியஸீம் விஷ்ணோ: மஹத் அபி மஹீயஸீம் ப்ரபத்யே பாதுகாம் நித்யம் தத்பதேநைவ ஸம்மிதாம்
ஸ்ரீரங்கநாதன் வாமனனாக நிற்கும்போது பாதுகைகள் மிகச் சிறியதாக உள்ளன. அவன் த்ரிவிக்ரமனாக நிற்கும்போது மிகவும் பெரியதாக உள்ளன. இப்படியாக அவனது திருமேனி போன்று பரிணாமம் கொண்டதாக இருக்கின்ற அவனது பாதுகையை நான் எப்போதும் சரணம் என்று பற்றுகிறேன்.