Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 780)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
பத்த ஹரி பாதயுகளம் தபநீய பாதுகே யுவயோ: மோசயதி ஸம்ச்ரிதாநாம் புண்யாபுண்யமய ச்ருங்கலா யுகளம்
தங்கமயமான பாதுகைகளே! உங்களது இந்த இணை என்பது இரண்டாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை ஒன்றாகக் கட்டுகிறது. இந்த இணையே, உங்களை அண்டியவர்களின் புண்ணியம் மற்றும் பாவம் என்னும் சங்கிலிகளின் பிணைப்பை விடுவிக்கின்றன.