Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 779)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
அப்ராப்தாநாம் உபஜநயத: ஸம்பதாம் ப்ராப்திம் ஏவம் ஸம்ப்ரப்தாநாம் ஸ்வயம் இஹ புந: பாலநார்த்தம் யதேதே ஸாக்ஷாத் ரங்கக்ஷிதிபதி பதம் பாதுகே ஸாதயந்த்யௌ யோக க்ஷேமௌ ஸுசரிதவசாத் மூர்த்திமந்தௌ யுவாம் ந:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! எங்களால் இதுவரை பெறப்படாமல் இருந்துள்ள ஐச்வர்யத்தை நாங்கள் அடையும்படிச் செய்கிறீர்கள் (இது யோகம் எனப்படும்). இதுவரை நாங்கள் அடைந்துள்ளதைக் காப்பாற்றுதலுக்கு நீங்களாகவே பெரும் முயற்சி எடுத்துக் கொள்கிறீர்கள் (இது க்ஷேமம் என்பதாகும்). உங்களுக்கு என்று வைத்துக் கொள்ளாமல், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எங்களுக்கே அளிக்கின்ற உங்களைக் காணும்போது, எங்கள் புண்ணியம் காரணமாக நாங்கள் பெற்ற யோகமும், க்ஷேமமும் வடிவெடுத்தது போன்றே உள்ளது.