Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 778)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

ந்யஸ்தம் விஷ்ணோ: பதம் இஹ மஹத் ஸ்வேந பூம்நா வஹந்த்யோ: ஆம்நாயாக்யாம் அவிஹதகதிம் வர்த்தயந்த்யோ: நிஜ ஆஜ்ஞாம் ஆஸந்நாநாம் ப்ரணய பதவீம் ஆத்மநா பூரயந்த்யோ: த்ரை ராஜ்யஸ்ரீ: பவதி ஜகதாம் ஐகராஜ்யே பவத்யோ:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! உங்கள் மீது வைக்கப்பட்ட மிகவும் உயர்ந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தாங்கி நிற்கிறீர்கள். இதனால் மிகுந்த பெருமையுடன் உள்ளீர்கள். வேதங்கள் என்னும் உங்கள் கட்டளைகளைத் தடைபடாத செல்வாக்கு கொண்டதாக இந்த உலகில் நிலை நாட்டுபவர்களாக உள்ளீர்கள். உங்கள் அருகில் வந்தவர்கள் விரும்பும் பொருள்களை, அவர்கள் கேட்காமலேயே, நீங்களாகவே நிரப்புகிறீர்கள். இப்படியாக நீங்கள் இந்த உலகிற்கு ஒரே சக்ரவர்த்தியாக உள்ளபோதிலும், தோற்றம் காரணமாக இரண்டு சக்ரவர்த்திகளாக உள்ளீர்கள்.