Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 777)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

அந்தர் மோஹாத் அவிதிதவதாம் ஆத்மதத்வம் யதாவத் பத்யாம் இத்தம் பரிசிதவதாம் பாதுகே பாபலோக்யாம் நித்யம் பக்தே: அநுகுணதயா நாதபாதம் பஜந்த்யௌ நிஷ்டே ஸாக்ஷாத் ஸ்வயம் இஹ யுவாம் ஜ்ஞாந கர்மாத்மிகேந:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! மனதிற்கு எற்ற நன்மைகளை அறியக்கூடிய தெளிவு இல்லாத காரணத்தினால், ஜீவாத்மா-பரமாத்மாக்கள் பற்றிய உண்மையை, உள்ளது உள்ளபடி அறியக்கூடிய அறிவு அற்றவர்களாக நாங்கள் உள்ளோம். மேலும் நரகங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய வழிகளைப் பழகிக் கொண்டவர்களாகவே நாங்கள் உள்ளோம். ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்த நீங்கள், எங்களுக்கு எப்படி உள்ளீர்கள் என்றால் – எங்களுக்கு இந்த உலகில் பக்தியோகம் கிட்டவேண்டும் என்பதற்காக ஞானயோகம் மற்றும் கர்மயோகம் என்பவையாகவே நீங்கள் வடிவு கொண்டதாக உள்ளீர்கள்.