Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 776)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
அச்ராந்த ஸஞ்சரணயோ: நிஜஸம்ப்ரயோகாத் அம்லாநதாம் சரணபங்கஜயோ: திசந்த்யௌ மாந்யே யுவாம் ரகுபதேர் மணிபாதரக்ஷே வித்யே பலாம் அதிபலாம் ச விசிந்துயாமி
இராமனுடைய இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இடைவிடாமல் நடக்கின்ற இராமனின் திருவடித்தாமரைகள் வாடிவிடாமல் இருக்கக்கூடிய தன்மையை நீங்களே அளிக்கிறீர்கள். இதனால் நீங்கள் வணங்கத்தக்கவர்களாக உள்ளீர்கள். இதனைக் காணும்போது, விச்வாமித்திரர் இராமனுக்கு உபதேசித்த பலை மற்றும் அதிபலை என்னும் மந்த்ரங்களாகவே நீங்கள் உள்ளீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.