Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 775)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
பர்யாயதோ கதிவசாத் மணிபாதரக்ஷே பூர்வாபரத்வ நியமம் வ்யதி வர்த்த யந்த்யௌ மந்யே யுவாம் மஹதி விஷ்ணுபதே ஸ்புரந்த்யௌ ஸந்த்யே ஸமஸ்த ஜகதாம் அபி வந்தநீயௌ
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகைகளே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும்போது நீங்கள் இருவரும் மாறிமாறி வருவதால், ”இது முன்னே, இது பின்னே” என்று என்ற கட்டுப்பாடு தாண்டியபடி உள்ளீர்கள். ஸ்ரீரங்கநாதனின் உயர்ந்த, பரந்த ஆகாசம் போன்ற திருவடிகளில் நீங்கள் உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்களைக் காணும்போது, அனைத்து உலகங்களும் உபாஸிக்கத் தகுந்த ப்ராதஸ்ஸந்த்யை மற்றும் ஸாயம் ஸந்த்யை என்று நான் எண்ணுகிறேன் (காலை நேரம், மாலை நேரம்).