Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 774)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

த்வாவேவ யத்ர சரணௌ பரமஸ்ய பும்ஸ: தத்ர த்விதா ஸ்திதவதீ மணிபாதுகே த்வம் யத்ரைவ தர்சயதி தேவி ஸஹஸ்ர பாத்த்வம் தத்ர அபி நூநம் அஸி தர்சித தாவதாத்மா

இரத்தினங்களால் இழைக்கப்பட்ட பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனாக நிற்கும் பரமபுருஷனுக்கு இரண்டு திருவடிகள் உள்ளபோது, நீ இரண்டாக உள்ளாய். ஆனால் வேதங்களில் கூறியபடி, ஆயிரம் திருவடிகளைக் கொண்டவனாக ஸ்ரீரங்கநாதன் நிற்கையில், நீ அத்தனை பாதுகைகளாகத் தோன்றுகிறாய் என்பது நிச்சயம்.