Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 773)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
விச்வ உபகாரம் அதிக்ருத்ய விஹார காலேஷு அந்யோந்யத: ப்ரதமம் ஏவ பரிஸ்புரந்த்யோ: த்ருஷ்டாந்தயந்தி யுவயோ: மணிபாதரக்ஷே திவ்யம் ததேவ மிதுநம் திவிஷந் நிஷேவ்யம்
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகைகளே! இந்த உலகங்களுக்குச் செய்யவேண்டிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் போது ”நான் முந்தி, நீ முந்தி” என்று போட்டி போட்டுக்கொண்டு நீங்கள் முன்னே வருகிறீர்கள். இதனால், நான்முகன் தொடக்கமான அனைத்து தேவர்களாலும் ஆராதிக்கப்படுகின்ற திருவரங்கத்தின் திவ்யதம்பதிகளாகவே உங்களைப் பலரும் கூறுகின்றனர் போலும்.
இந்த உலகத்தைக் காப்பாற்றுவதில் எப்போதும் ஸ்ரீரங்கநாதனுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் போட்டி உள்ளது. யார் முதலில் சென்று காப்பாற்றுவது என்பதே ஆகும். இது போன்றே, ஸ்ரீரங்கநாதனின் இடது பாதுகையும் வலது பாதுகையும் போட்டி போடுகின்றன என்கிறார்.