Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 772)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
ஸாக்ஷாத் பதம் மதுபித: ப்ரதிபாதயந்த்தௌ மாந உபபத்தி நியதே மணிபாதுகே த்வே அந்யோந்ய ஸங்கதிவசாத் உபபந்ந ஆசர்யாம் ஆஜ்ஞாம் ச்ருதி ஸ்ம்ருதி மயீம் அவதாரயாமி
ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகள் இரண்டும் அவனது திருவடிகளை நாம் காணும்படிச் செய்கின்றன. அவனுடைய ஸ்வரூபத்தை நமக்கு உள்ளது உள்ளபடி அறிவிக்கின்றன. வேதங்கள் என்னும் ப்ரமாணங்களாலும், தர்க்கங்களாலும் நிச்சயிக்கப்பட்ட பெருமை கொண்டவையாக உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து அழகான நடையை கொண்டதாக உள்ளன. இப்படிப்பட்ட பாதுகைகள் ச்ருதிகள், ஸ்ம்ருதிகள் என்பதான ஸ்ரீரங்கநாதனின் கட்டளைகள் என்றே நான் எண்ணுகிறேன்.