Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 771)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

ரங்கநாத பதயோ: அலங்க்ரியா ராஜதே கநக பாதுகா த்வயீ தத்விபூதி யுகளீவ தாத்ருசீ ச்சாந்தத: ஸமவிபாகம் ஆச்ரிதா

ஸ்ரீரங்கநாதனின் அழகான திருவடிகளுக்கு அலங்காரமாக விளங்குகின்ற தங்கமயமான பாதுகைகள் இரண்டும் – அவனுடைய விருப்பத்தினால் ஒரே போன்ற பிரிவை அடைந்துள்ள அவனது லீலாவிபூதி, நித்யவிபூதி போன்று உள்ளன.