Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 770)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

மாநயாமி ஜகத: தமோபஹே மாதவஸ்ய மணிபாதுகே யுவாம் தக்ஷிணோத்தர கதிக்ரம் உசிதே பத்ததீ இவ மயூக மாலிந:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகில் உள்ள அஞ்ஞானம் என்னும் இருளை நீக்குபவர்களாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! தக்ஷிணாயம், உத்தராயணம் என்னும் சூரியனின் தெற்கு வடக்கு மார்க்கங்கள் போன்றே உங்களை நான் எண்ணுகிறேன்.