Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 769)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

ரங்க ஸீமநி ரதாங்க லக்ஷ்மண: சிந்தயாமி தபநீய பாதுகே சாபதோஷ சமநாய தத்பதே சக்ரவாக மிதுநம் க்ருதாஸ்பதம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் சக்கரத்தை அடையாளமாகக் கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதனின் தங்கமயமான பாதுகைகளான உங்களைக் காணும்போது - சாபத்தின் பரிஹாரமாக அவனுடைய கோயிலில் வாஸம் செய்யும் சக்ரவாகப் பக்ஷிகளின் ஜோடி என்றே நான் எண்ணுகிறேன்.

இராமன் சீதையைப் பிரிந்து துன்பம் காரணமாகக் குயிலைத் தாய் வளர்க்காது, சக்ரவாகப் பறவைகள் இரவில் சேரக்கூடாது போன்ற சாபங்களை இட்டான். இதனை இங்கு கூறுகிறார். எந்தவிதமான சாபமும் ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்து, ஸ்ரீரங்கநாதனை அண்டியபடி நின்றால் நீங்கும் என்பது உட்கருத்து.