Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 768)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

பாதுகே பவ பய ப்ரதீபயோ: பாவயாமி யுவயோ: ஸமாகமம் ஸக்தயோ: தநுஜவைரிண: பதே வித்யயோ: இவ பராவராத்மநோ:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீங்கள், ஸம்ஸார பயத்திற்குச் சத்ருவாக உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்கள் இருவரது சேர்க்கையைக் காணும்போது, பரை மற்றும் அபரை என்ற வித்யைகளின் சேர்க்கை என்றே நான் எண்ணுகிறேன்.

பலவிதமான சாஸ்திரங்களைக் கற்று, அவனை அடைவதற்கான செயல்களில் ஈடுபட உதவுவதற்கு அபரவித்யை என்று பெயர். எம்பெருமானைப் பற்ற உதவும் அவனது உபாஸனம் என்பதற்குப் பரவித்யை என்று பெயர்.