Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 767)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

பார்ச்வயோ: ஸரஸிஜா வஸுந்தரே பாதயோச்ச மணிபாதுகே யுவாம் ஸந்நிகர்ஷத நசேத் மது த்விஷ: கிம் கரிஷ்யதி க்ருத ஆகஸாம் கண:

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகைகளே! மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனுக்கு இரு பக்கங்களிலும் மஹாலக்ஷ்மியும், பூமிப்பிராட்டியாரும் உள்ளனர். இப்படியாக அந்தப் பிராட்டிமார்களாக நீங்கள் (பாதுகைகள்) ஸ்ரீரங்கநாதன் அருகே இல்லாமல் போனால், பாவம் செய்பவர்களின் கூட்டம் என்ன செய்யும்?