Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 766)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
அவதீரித ஸாது பத்ததீநாம் அலஸாநாம் மதுவைரி பாதுகே த்வே இதரேதரஸாஹசர்ய மித்தம் ப்ரதிபந்நே இவ தைவபௌருஷே ந:
முன்னோர்கள் கூறிய ஸத் மார்க்கத்தைக் கைவிட்டவர்களும், சோம்பேறிகளாகவும் உள்ள எங்களைப் போன்றவர்களுக்கு, மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் இரண்டு பாதுகைகளும் செய்வது என்னவென்றால் – ஒன்றுக்கொன்று துணையாக நிற்பதான தெய்வத்தின் செயல்கள், மனிதர்களின் செயல்கள் போன்று இந்தப் பாதுகைகள் நின்று, எங்களுக்கு உதவுகின்றன.