Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 764)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

முரபித் மணிபாதுகே பவத்யோ: விஹிதோ நூநம் அஸௌ மிதோ விபாக: பஜதாம் அபரஸ்பர ப்ரியாணாம் அவிரோதாய ஸுர அஸுரேச்வராணாம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! உங்களுக்குள் பரஸ்பரம் உள்ள இந்த இரண்டு என்னும் தன்மையானது, உங்களை வந்து வணங்குகின்ற, ஒருவருக்கொருவர் நட்பு இல்லாமல் உள்ள, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கலகம் ஏற்படாமல் இருப்பதற்காக உள்ளது போலும்.