Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 763)

Paththati 24 - த்வந்த்வ பத்ததி

சரணௌ மணிபாதுகே முராரே: ப்ரணதாந் பாலயிதும் ப்ரபத்யமாநம் விபதாம் இவ தைவ மாநுஷீணாம் ப்ரதிகாரம் யுவயோ: த்வயம் ப்ரதீம:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இந்த உலகில் உள்ளவர்களுக்கு மனிதர்களாலும் தேவர்களாலும் வருகின்ற ஆபத்தை நீக்குவதற்காகவே நீங்கள் உள்ளீர்கள் (இரண்டு பாதுகைகள்). இப்படியாக உள்ள நீங்கள், உங்களை வந்து வணங்குபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே, நீங்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்ததாக நாங்கள் எண்ணுகிறோம்.