Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 762)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
மணிபாதுகயோர் யுகம் முராரே: மம நித்யம் விததாது மங்களாநி அதிக்ருத்ய சராசரஸ்ய ரக்ஷாம் அநுகம்பா க்ஷமயோ: இவ அவதார:
அசைபவை, அசையாமல் உள்ளவை போன்ற இரு தன்மைகள் கொண்ட இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு, ஸ்ரீரங்கநாதனுக்குத் தயை மற்றும் பொறுமை ஆகிய குணங்கள் உண்டு. இந்தக் குணங்களின் உருவம் போன்றே உள்ள ஸ்ரீரங்கநாதனின் இரண்டு இரத்தினமயமான பாதுகைகள், என் விஷயத்தில் எப்போதும் நன்மைகளைச் செய்யவேண்டும் (ஒரு பாதுகை தயை, ஒரு பாதுகை மன்னிக்கும் தன்மை அளிக்கின்றன).