Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 761)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
ப்ரபத்யே பாதுகாரூபம் ப்ரணவஸ்ய கலாத்வயம் ஓதம் மிதம் இதம் யஸ்மிந் அநந்தஸ்யாபி தத்பதம்
ப்ரணவத்தின் ரூபமாகவே உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகை இணையை நான் சரணம் அடைகிறேன். இந்த இணையில் அற்பமான ஜீவனும், எல்லையற்ற ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபமும் கோர்க்கப்பட்டுள்ளது.
ஜீவன் என்பவன் அனைத்தையும் காக்கும் ஸர்வேச்வரனைச் சேர்ந்தவன் என்று ப்ரணவம் கூறுகிறது. ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகள் ஜீவர்களின் தலையில் வந்து அமர்ந்து, இவர்கள் ஸ்ரீரங்கநாதனைச் சார்ந்தவர்கள் என்று உணர்த்துவதாகக் கூறுகிறார். ஆக இரண்டும் (ப்ரணவம், பாதுகைகள்) ஒரே தன்மை கொண்டவை என்கிறார்.