Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 760)

Paththati 23 - சேஷ பத்ததி

பஹுமுகபோக ஸமேதை: நிர்முக்ததயா விசுத்திம் ஆபந்நை: சேஷாத்மிகா பதாவநி நிஷேவ்யஸே சேஷபூதை: த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனின் அவதாரமான நீ, பலவிதமான இன்பங்களுடன் கூடியவர்களும், அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபட்டதனால் தோஷம் இல்லாத தன்மையை அடைந்தவர்களும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் தொண்டர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாய்.

இங்கு பஹுமுக என்பதைப் பல முகங்கள் என்றும், நிர்முக்ததயா என்பதை தோல் உரித்த காரணத்தினால் என்றும், விசுத்திம் என்பதைப் பளபளப்பு என்றும், சேஷ என்பதை நாகங்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இப்படிக் கொண்டால், பலவிதமான நாகங்களால் ஆதிசேஷனாக உள்ள நீ வணங்கப்படுகிறாய் எனலாம்.