Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 759)
Paththati 23 - சேஷ பத்ததி
அஹீநாத்மா ரங்கக்ஷிதி ரமண பாதாவநி ஸதா ஸதாம் இத்தம் த்ராணாத் ப்ரதித நிஜ ஸத்த்ரத்வ விபவா அவித்யா யாமிந்யா: ஸ்ப்ருசஸி புந: ஏகாஹ பதவீம் க்ரதூநாம் ஆராத்யா க்ரதுரபி ச ஸர்வஸ்த்வம் அஸி ந:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அஹீநம் என்னும் யாக ஸ்வரூபமாக (ஆதிசேஷன் ரூபமாக) நீ உள்ளாய். எப்போதும் நாங்கள் காணும்படியாக ஸத்துக்களைக் காப்பதால், மிகவும் ப்ரஸித்தமான ஸத்ரம் என்ற யாகமாக உள்ளாய். அஞ்ஞானம் என்ற இரவுப்பொழுது விடிவதற்கு ஏற்ற பகல் என்பதான ஏகாஹம் எனப்படும் யாகமாக உள்ளாய். இப்படியாகப் பல யாகங்களுக்கு உரிய தேவதையாகவும், அனைத்துமாகவும் நீயே உள்ளாய்.