Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 758)
Paththati 23 - சேஷ பத்ததி
பூயோ பூய: ஸ்திமித சலிதே யஸ்ய ஸங்கல்ப ஸிந்தௌ ப்ரஹ்ம ஈசாந ப்ரப்ருதய இமே புத்புதத்வம் பஜந்தி தஸ்யாநாதே: யுக பரிணதௌ யோகநித்ரா அநுரூபம் க்ரீடா தல்ப்பம் கிமபி தநுதே பாதுகே பூமிகா அந்யா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸங்கல்பம் என்பது ஸமுத்திரம் போன்று அசையாமலும், அசைந்தபடியும் உள்ளது. இந்த ஸமுத்திரத்தில் நான்முகன், சிவன் போன்றோர் நீர்க்குமிழிகள் போன்றுள்ள தன்மையை அடைகின்றனர். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனுக்கு, ப்ரளய காலத்தில் அவன் யோகநித்திரை கொண்டதற்கு ஏற்ற ஆலிலையாக நீ மற்றோர் உருவம் எடுக்கிறாய். இந்தத் தன்மை இனிமையான படுக்கையை ஏற்படுத்துகிறது.