Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 757)
Paththati 23 - சேஷ பத்ததி
பரத சிரஸி லக்நாம் பாதுகே தூரத: த்வாம் ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: சேஷபூத: கிம் இதம் இஹ விசித்ரம் நித்யயுக்த: ஸிஷேவே தசரத தநயஸ்ஸந் ரங்கநாத: ஸ்வமேவ
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனாகிய லக்ஷ்மணன் தனது உருவமான உன்னை, பரதனின் தலையில் நீ வீற்றிருந்தபோது, உன்னைத் தூரத்தில் நின்றபடி வணங்கினான். இப்படியாகத் தனது உருவமாகவே உள்ள ஒருவரை மற்றவர் வணங்குவது இந்த உலகில் வியப்பான செயல் அல்ல, எப்படி? தசரதனின் புத்திரனாக அவதரித்த ஸ்ரீரங்கநாதன் தன்னைத்தானே ஆராதித்தபடி இருந்தான் அல்லவோ? (திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதன் இராமனால் ஆராதிக்கப்பட்டவன் ஆவான். இராமனாக வந்ததும் ஸ்ரீரங்கநாதனே என்பதால், இப்படிக் கூறுகிறார்).