Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 756)
Paththati 23 - சேஷ பத்ததி
சேஷத்வ ஸீமநியதாம் மணிபாதரக்ஷே த்வாம் ஆகமா: குலவதூம் இவ பாலபுத்ரா: த்வத் ரூபபேத சயிதஸ்ய பரஸ்ய பும்ஸ: பாத உபதாந சயிநாம் உபதாநயந்தி
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! அடிமைத்தனத்தின் எல்லையாக நீ உள்ளாய்; உன்னுடைய உருவமான ஆதிசேஷன் மீது சயனித்துள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளையே தலையணை என்று எண்ணி, அங்கேயே நீ சயனித்துள்ளாய். இப்படியாகக் கணவனின் கால்களில் சயனித்துள்ள பதிவ்ரதை போன்ற உன்னைத் தங்கள் தாயாகக் கொண்டு, உன்னைத் தங்கள் தலையணை ஆக்கி, வேதங்கள் என்ற குழந்தைகள் நிம்மதியாக சயனித்துள்ளன.