Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 755)
Paththati 23 - சேஷ பத்ததி
தத்தாத்ருசா நிஜபலேந நிரூட கீர்த்தி: சேஷ: தவ ஏவ பரிணாம விசேஷ ஏஷ: ராமேண ஸத்ய வசஸா யத் அநந்ய வாஹ்யாம் வோடும் புரா வஸுமதீம் பவதீ நியுக்தா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தன்னுடைய அளவு கடந்த பலம் என்னும் காரணத்தினால் நிலையான புகழ்பெற்ற ஆதிசேஷன், உனது அவதாரமே என்பதற்கு ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரம் எது? எப்போதும் உண்மையை மட்டுமே கூறுகின்ற இராமனால், யாராலும் தாங்க இயலாத பூமியைத் தாங்கும்படி, நீ அல்லவோ கட்டளை இடப்பட்டாய்?