Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 754)
Paththati 23 - சேஷ பத்ததி
மாபூத் இயம் மயி நிஷண்ண பதஸ்ய நித்யம் விச்வம் பரஸ்ய வஹநாத் வ்யதிதா இதி மத்த்வா தத்ஸே பல அப்யதிகயா மணிபாதுகே த்வம் சேஷாத்மநா வஸுமதீம் நிஜயைவ மூர்த்த்யா
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! “என் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸஞ்சரிக்கும் ஸ்ரீரங்கநாதனை இந்தப் பூமியானது எப்போதும் தாங்குவதால் வருந்துகிறதோ?”, என்று நீ எண்ணுகிறாய் போலும். அதனால், அதிக பலம் நிறைந்ததான ஆதிசேஷன் என்னும் உருவம் எடுத்து, இந்தப் பூமியைத் தாங்குகிறாய் போலும்.