Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 753)
Paththati 23 - சேஷ பத்ததி
சேஷத்வம் அம்ப யதி ஸம்ச்ரயதி ப்ரகாமம் த்வத் பூமிகாம் ஸமதிகம்ய புஜங்கராஜ: த்வாம் ஏவ பக்தி விநதை: வஹதாம் சிரோபி: காஷ்டாம் கதம் ததிஹ கேசவ பாதரக்ஷே
அழகான கேசங்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! தாயே! நாகங்களின் அரசனான ஆதிசேஷன் உனது உருவம் எடுத்து ஸ்ரீரங்கநாதனைத் தாங்கி நிற்கும்போது, அவனது அடிமைத்தனம் மேலும் அதிகமாகிறது. அப்படிப்பட்ட உன்னைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின் அடிமைத்தனம், இந்த உலகில் மேலும் உயர்வைப் பெறுகிறது.
படுக்கையாக உள்ளதைக் காட்டிலும் பாதுகையாக உள்ளபோது ஆதிசேஷனின் அடிமைத்தனம் அதிகமாகிறது. அப்படிப்பட்ட பாதுகையைத் தலையில் ஏற்பது, ஆதிசேஷனின் அடிமைத்தனத்தைக் காட்டிலும் உயர்ந்த செயல் அல்லவோ?