Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 752)
Paththati 23 - சேஷ பத்ததி
பத்மா போகாத் பாதுகே ரங்கபர்த்து: பாத ஸ்பர்சாத் போகம் அந்யம் ப்ரபித்ஸோ: சேஷஸ்ய ஏகாம் பூமிகாம் அப்ரவீத் த்வாம் ஆசார்யாணாம் அக்ரணீ: யாமுநேய:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தொட்டபடி உள்ளதால் ஸ்ரீரங்கநாச்சியார் அடையும் இன்பத்தைக் காட்டிலும், உயர்ந்த இன்பமாகிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளால் மிதிபடும் இன்பத்தை அடையவேண்டும் என்று ஆதிசேஷன் எண்ணினான் போலும். இதனால்தான், ஆசார்யர்களில் உயர்ந்தவரான ஆளவந்தார், உன்னை ஆதிசேஷனின் அவதாரமாகக் கூறினார்.