Sri Paduka Sahasram - Paththati 23 - சேஷ பத்ததி (ச்லோகம் 751)

Paththati 23 - சேஷ பத்ததி

ஸ்ருஷ்டாம் பூமௌ அநந்தேந நித்யம் சேஷ ஸமாதிநா அஹம் ஸம்பாவயாமி த்வாம் ஆத்மாநம் இவ பாதுகே

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்தப் பூமியில் எப்போதும் கைங்கர்யம் செய்தபடி இருக்கவேண்டும் என்று ஆதிசேஷன் உன்னை இங்கு ஏற்படுத்தினான். இப்படியாகத் தன்னைப் போன்றே உன்னை இங்கு உண்டாக்கினான் என்றே எண்ணுகிறேன்.