Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 749)
Paththati 22 - காஞ்சன பத்ததி
கநக ருசிரா காவ்ய அக்யாதா சநை: சரண உசிதா ச்ரித குரு புத பாஸ்வத் ரூபா த்விஜாதிப ஸேவிதா விஹித விபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே த்வம் அஸி மஹதீ விச்வேஷாம் ந: சுபா க்ரஹமண்டலீ
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! தங்கமயமான காரணத்தால் சிவந்தும் (செவ்வாய் = அங்காரகன் போன்று), இராமாயணம் போன்ற காவியங்களால் (சுக்கிரன்) கூறப்பட்டும், மெதுவான ஸஞ்சாரத்திற்கு (சனி) ஏற்றபடியும், ஆசார்யன் மற்றும் வித்வான்களால் (குரு, புதன்) அடையப்பட்டபடியும், பளபளப்பான திருமேனி கொண்டும் (சூரியன்), அந்தணர்களால் போற்றப்பட்டும் (சந்த்ரன்), ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் (ஆகாசம்) நீ எப்போதும் மேன்மையை ஏற்படுத்தியபடி உள்ளாய். இப்படியாக உள்ள நீ எங்களுக்கு எப்போதும் நன்மை அளிக்கவல்ல நவக்ரஹங்களின் கூட்டமாகவே உள்ளாய் (இதனால் பாதுகையே நவக்ரஹம் என்பதும், அந்தக் கூட்டம் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் எப்போதும் உள்ளன என்றும் கருத்து).