Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 748)
Paththati 22 - காஞ்சன பத்ததி
தார ஆஸங்க ப்ரதித விபவாம் சாருஜாம் பூநதாபாம் த்வாம் ஆரூட: த்ரிதச மஹிதம் பாதுகே ரங்கநாத: ஸஞ்சாரிண்யாம் ஸுரசிகரிண: தஸ்துஷா மேகலாயாம் தத்தே மத்தத் விரத பதிநா ஸாம்ய கக்ஷ்யாம் ஸமீக்ஷ்யாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முத்துக்களின் தொடர்பால் ஏற்பட்ட மிகுந்த பெருமை, அழகான தங்கமயமான ப்ரகாசம் போன்ற தன்மைகள் கொண்ட நீ, தேவர்களால் கொண்டாடப்பட்டபடி உள்ளாய். இப்படிப்பட்ட உன் மீது நின்றபடி ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும்போது, தங்கமயமான மேரு மலையின் தாழ்வாரையில் நிற்கின்ற மதம் பிடித்த யானையின் உயர்ந்த தன்மையை அவன் அடைகிறான் (இங்கு பாதுகை = மேருமலை, ஸ்ரீரங்கநாதன் = மேருமலையில் நிற்கும் யானை).