Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 747)

Paththati 22 - காஞ்சன பத்ததி

விசுத்திம் அதிகச்சதி ஜ்வலந ஸங்கமாத் காஞ்சநம் விதந்தி ச ஜகந்தி தத் ந கலு தத் விபர்யஸ்யதி கதம் கநக பாதுகே கமலலோசநே ஸாக்ஷிணி த்வயைவ பரிசுத்ததா ஹுதபுஜ: அபி ஜாகட்யதே

தங்கமயமான பாதுகையே! தங்கம் என்பது அக்னியில் இடப்படும்போது மிகுந்த தூய்மையை அடைகிறது. இதனை உலகில் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள். இந்த விதி மாறுபடாமல் உள்ளது. ஆனால் அழகான கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதன் பார்த்துக்கொண்டு நிற்கையில், ஆராதனத்தின் முடிவில், உன்னை அக்னியின் தலையில் வைக்கும்போது, அந்த அக்னி தூய்மைப் பெறுவது எப்படி? (அக்னியால் தங்கம் தூய்மை அடையாமல், தங்கமயமான பாதுகையால் அக்னி தூய்மை அடைவதைக் கண்டு வியக்கிறார்).