Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 746)

Paththati 22 - காஞ்சன பத்ததி

கநகமபி த்ருணாம் யே மந்வதே வீதராகா: த்ருணம் அபி கநகம் தே ஜாநதே த்வத் ப்ரகாசை: மதுரிபு பதரக்ஷே யத் த்வத் அர்த்தோபநீதாந் பரிணமயஸி ஹைமாந் தேவி தூர்வாங்குராதீந்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைதேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! ஒரு சிலர், ஸ்ரீரங்கநாதன் மீது கொண்ட ஆசை காரணமாக, மற்ற ஆசைகளைத் துறந்து, தங்கத்தைக் கூட அற்பமான புல்லாக எண்ணுவார்கள். ஆனால் அவர்கள் புல்லைக்கூட தங்கமாக எண்ணும்படிச் செய்கிறாய். எப்படி? அவர்களால் உனக்குச் சமர்ப்பணம் செய்யப்படும் அருகம்புல் போன்றவற்றை, உனது ஒளியால் தங்கமயமாக மாற்றி விடுகிறாய் அல்லவோ?