Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 745)
Paththati 22 - காஞ்சன பத்ததி
அநுகலம் உபஜீவ்யா த்ருச்யஸே நிர்ஜராணாம் த்ரிபுர மதந மௌளௌ சேகரத்வம் ததாஸி ப்ரதிபதம் அதிகம்ய ப்ராப்த ச்ருங்காஸி சௌரே: தத்பி சரணரக்ஷே பூர்ண சந்த்ராக்ருதி: த்வம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒவ்வொரு நொடியும், தேவர்களுக்கு ஆகாரமாக உட்கொள்ளத் தக்கவளாக நீ காணப்படுகிறாய். சிவனின் தலையில் பூர்ணமான அலங்காரமாக உள்ள தன்மையை அடைகிறாய். ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடிவைப்பையும் நீ அடைந்து, சீரிய முனைகளைப் பெற்றுள்ளாய். இப்படி உள்ளபோதிலும் நீ பூர்ணசந்த்ரனாக, தங்கமயமாக உள்ளாய்.
சந்த்ரனின் கலையில் அமிர்தம் உள்ளதால் அதனைத் தேவர்கள் பருகிறார்கள்; இதனால் சந்த்ரன் பூர்ணமாக இருக்க முடியாது. சிவனின் தலையில் உள்ள சந்த்ரன் பூர்ணசந்த்ரன் அல்ல. ஒவ்வொரு நொடியும் சந்த்ரன் தேய்வதால், பூர்ணமாக இருக்க முடியாது. ஆனால் பாதுகைகள் சந்த்ரன் போன்றே உள்ளபோதும், பூர்ணமாக உள்ளாள் என்கிறார்.