Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 744)

Paththati 22 - காஞ்சன பத்ததி

கநகருசிர வர்ணாம் பாதுகே ஸஹ்ய ஸிந்து: ச்ரியம் இவ மஹநீயாம் ஸிந்துராஜஸ்ய பத்நீ ஸ்வயம் இஹ ஸவிதஸ்தா ஸௌம்ய ஜாமாத்ருயுக்தாம் உபசிரதி ரஸேந த்வாம் அபத்யாபிமாநாத்

ஸ்ரீரங்கநாதானின் பாதுகையே! தங்கம் போன்று அழகான தன்மைகள் கொண்டு, ஸ்ரீரங்கநாதன் என்னும் மாப்பிள்ளையுடன் கூடியவளாக நீ உள்ளாய். இப்படிப்பட்ட உன்னை, ஸ்ரீரங்கநாச்சியார் போன்றே, தன்னுடைய பெண்ணாகவே காவேரி எண்ணுகிறாள். ஸமுத்ரராஜனின் பத்னியாகிய காவேரி, ஸ்ரீரங்கத்தில் இருந்தபடி உன்னைத் தனது பெண்ணாகக் கருதி உபசரிக்கிறாள்.