Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 743)
Paththati 22 - காஞ்சன பத்ததி
ஸுரபி நிகமகந்தா ஸௌம்ய பத்மா கரஸ்தா கநக கமலநீவ ப்ரேக்ஷ்யஸே பாதுகே த்வம் ப்ரமர இவ ஸதா த்வாம் ப்ராப்த நாநாவிஹார சதமகமணி நீல: ஸேவதே சார்ங்கதந்வா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் அழகிய திருக்கைகள் போன்று காணப்படும் சந்தரபுஷ்கரணியில் (தாமரைக்குளத்தில்) உள்ள பொன் தாமரைக் கொடி போன்று நீ உள்ளாய். உன் மீது எப்போதும் வேதங்களின் வாசனை வீசியபடி உள்ளது. அனைத்து இடங்களிலும் ஸஞ்சாரம் செய்கின்ற ஸ்ரீரங்கநாதன், இந்த்ரநீலம் போன்று கறுத்த திருமேனி உடையவனாக, ஒரு வண்டு போன்று, தாமரையாக உள்ள உன்னை அடைகிறான்.