Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 742)
Paththati 22 - காஞ்சன பத்ததி
விஹரதி புளிநேஷு த்வத் ஸகே ரங்கநாதே கநகஸரித் இயம் தே பாதுகே ஹேம தாம்நா வஹதி ஸலிலகேளி ஸ்ரஸ்த சோள அவரோத ஸ்தந கலச ஹரித்ரா பங்க பிங்காம் அவஸ்தாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடன் எப்போதும் சேர்த்தே காணப்படும் ஸ்ரீரங்கநாதன், காவேரியின் மணல்களில் ஸஞ்சாரம் செய்யும்போது, உனது தங்கமயமான ஒளியில் காவேரி ஜலக்ரீடை செய்கிறாள். அப்போது அந்த நிலையைக் காணும்போது – சோழநாட்டுப் பெண்களுடைய ஸ்தனங்களில் பூசப்பட்ட மஞ்சள் குழம்பானது கரைந்து, எங்கும் படர்ந்த நிலையைக் காவேரி கொண்டது போன்று உள்ளது.