Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 741)
Paththati 22 - காஞ்சன பத்ததி
த்வயி ஏவ பாதம் அதிரோப்ய நவம் ப்ரவாஹம் நாதே பதாவநி நிசாமயிதும் ப்ரவ்ருத்தே ஆத்மீய காஞ்சநருசா பவதீ விதத்தே ஹேமாரவிந்த பரிதாம் இவ ஹேமஸிந்தும்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியில் வருகின்ற புது வெள்ளத்தைக் காண்பதற்கு (ஆடி 28) உன் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸ்ரீரங்கநாதன் காவேரியின் கரைக்கு எழுந்தருளுகிறான். அப்போது உனது தங்கமயமான ஒளி மூலமாக நீ காவேரியை கடாக்ஷிக்கிறாய். இதனால் காவேரி எங்கும் பொற்றாமரைகள் நிரம்பியது போன்று செய்கிறாய்.