Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 740)

Paththati 22 - காஞ்சன பத்ததி

சித்ரம் ஸரோஜ நிலயா ஸஹிதஸ்ய சௌரே: வாஸோ சிதாநி சரணாவநி ஸம்விதித்ஸோ: ஸத்யோ விகாஸம் உபயாந்தி ஸமாதிபாஜாம் சந்த்ராதபேந தவ மாநஸ பங்கஜாதி

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியவனாகிய ஸ்ரீரங்கநாதன் வசிப்பதற்கு ஏற்ற இடமாக முனிவர்களின் மனம் என்னும் தாமரைகளை நீ அமைக்க விரும்புகிறாய். இதனால் உனது தங்கமயமான ஒளியை, நிலவின் ஒளி போன்று வீசுகிறாய். இதனால் அவர்களின் மனம் என்னும் தாமரைகள் உடனேயே மலர்ந்து விடுகின்றன. என்ன வியப்பு! (இங்கு வியப்பு என்றால் – சந்த்ரனின் ஒளியால் தாமரை மலர்தல் ஆகும்).