Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 739)
Paththati 22 - காஞ்சன பத்ததி
லேபே ததாப்ரக்ருதி நூநம் இயம் பவத்யா: காந்த்யா கவேரதநயா கநகாபகாத்வம் யாவந் முகுந்தபத ஹேம பதாவநி த்வம் புண்யம் விபூஷிதவதீ புளிநம் ததீயம்
ஸ்ரீரங்கநாதனின் தங்கமயமான பாதுகையே! நீ எப்போது காவேரியின் தூய்மையான மணற்குன்றான திருவரங்கத்தை அலங்கரித்தாயோ அது முதல், காவேரியானது உன்னுடைய தொடர்பு பெற்று, தங்கமயமான ஆறாக உள்ள தன்மையை அடைந்தது என்பது நிச்சயம்.